பள்ளிக்கூடம்-கல்லூரிகளில் பொங்கல் கொண்டாட்டம்
ஈரோடு பகுதியில் உள்ள பள்ளிக்கூடம்-கல்லூரிகளில் நடந்த பொங்கல் பண்டிகையை மாணவ-மாணவிகள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.
ஈரோடு,
இந்து இண்டர்நேஷனல்
பொங்கல் பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
ஈரோடு பெருந்துறை ரோடு வி.கே.வலசு பகுதியில் உள்ள இந்து இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடத்தில் நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி மாணவ-மாணவிகள் பாரம்பரிய ஆடையில் பள்ளிக்கூடத்துக்கு வந்திருந்தனர். பெரும்பாலான மாணவர்கள் வேட்டி அணிந்தும், மாணவிகள் தாவணி, சேலை அணிந்தும் வந்திருந்தனர். வகுப்பு வாரியாக பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோலப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டிகளும் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளுக்கு பள்ளிக்கூட தாளாளர் கே.கே.பாலுசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பி.அருண்குமார், பள்ளிக்கூட முதல்வர் எஸ்.சுவர்ணலதா ஆகியோர் தலைமையில் பள்ளிக்கூட ஆசிரிய-ஆசிரியைகள் ஏற்பாடுகளை செய்து இருந்தனர். விழாவில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு மாட்டு வண்டி சவாரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மழலையர் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளும் மாட்டு வண்டியில் ஏறி பள்ளிக்கூட வளாகத்தில் உற்சாகமாக உலா வந்தனர்.
பாரதிதாசன்
ஈரோடு அருகே உள்ள எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளிக்கூட தாளாளர் என்.கே.கே.பெரியசாமி தலைமை தாங்கினார். பொருளாளர் வி.ஏ.முருகன், இயக்குனர் பத்மாவதி பெரியசாமி, செயலாளர்கள் வசந்தி சத்தியன், பரிமளாராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மாணவ-மாணவிகளுக்காக பாரம்பரிய கலைப்போட்டிகள் நடத்தப்பட்டன. கயிறு இழுக்கும்போட்டி, உறியடித்தல் போட்டி நடந்தது. விழாவையொட்டி மாணவர்கள் அனைவரும் பாரம்பரிய ஆடையான வேட்டி அணிந்து கலந்து கொண்டனர். வகுப்பு வாரியாக மாணவர்கள் ஒரே நிற சட்டை அணிந்து உற்சாகமாக வலம் வந்தனர். இதுபோல் மாணவிகள் அனைவரும் சேலை அணிந்தும், தாவணி அணிந்தும் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் ராமமூர்த்தி தலைமையில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
வேளாளர் மகளிர் கல்லூரி
ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில் நேற்று பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கல்லூரி தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர் தலைமை தாங்கினார். கல்லூரியின் அனைத்து துறை வாரியாக தனித்தனியாக பொங்கல் வைக்கப்பட்டது. 28 பானைகளில் மாணவிகள் பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கியதும் கல்லூரி வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில் முன்பு வைத்து பூஜை செய்யப்பட்டது. மாணவிகளுக்கான பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. உறியடித்தல், வடம் இழுத்தல் போட்டிகளும் நடத்தப்பட்டன. கல்லூரி முதல்வர் டி.கமலவேணி தலைமையில் அனைத்து துறை பேராசிரியைகள், கல்லூரி பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
இதுபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிக்கூடம்-கல்லூரிகளில் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சில அரசு பள்ளிக்கூடங்களிலும் மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
ஆர்.ஏ.என்.எம். கல்லூரி
ஈரோடு ரங்கம்பாளையம் ஆர்.ஏ.என்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு முதலியார் கல்வி அறக்கட்டளை தலைவர் யு.என்.முருகேசன் தலைமை தாங்கினார். செயலாளர் மற்றும் தாளாளர் கே.கே.பாலுசாமி, பொருளாளர் ஏ.விஜயகுமார், இணைச்செயலாளர் பி.அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார். விழாவில், மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் ஆகியோர் பொங்கல் வைத்தனர். இதில், துணைத்தலைவர்கள் கே.பி.மணி, கே.வி.ராஜமாணிக்கம், பி.பி.மாணிக்கம், கல்லூரி முதல்வர் ஏ.பழனியப்பன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அதைத்தொடர்ந்து கல்லூரியில், ‘சின்னத்திரையும் வண்ணத்திரையும் இன்றைய இளைஞர்களை சீர்படுத்துகிறதா? சீரழிக்கிறதா’? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. இதில் பட்டிமன்ற நடுவராக கோவை தமிழ்ச்சங்க தலைவர் கவிஞர் மானூர் புகழேந்தி கலந்துகொண்டார். இதில் பேச்சாளர்கள் கலைச்செல்வன், கவிஞர் தமிழரசி மற்றும் பேராசிரியர்கள் ஜே.நிர்மல்ராஜ், எஸ்.வாசுகி, மாணவ-மாணவிகள் தாரணி, முகேஷ் கண்ணன், முப்புடாதி முத்து, பிரபாகரன் ஆகியோர் பேசினார்கள்.
முன்னதாக கல்லூரி பேரவை துணை தலைவர் கே.சாமிநாதன் வரவேற்றார். முடிவில், தமிழ் பேரவை துணை தலைவர் ஆர்.வளர்மதி நன்றி கூறினார்.
செங்குந்தர் பள்ளிக்கூடம்
ஈரோடு செங்குந்தர் நர்சரி பிரைமரி பள்ளிக்கூடத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளிக்கூட தலைமை ஆசிரியை சு.இளமதி குத்துவிளக்கு ஏற்றி மாணவ-மாணவிகளுக்கு பொங்கலின் சிறப்பு குறித்து எடுத்து கூறினார். இதில் ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும் மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

Next Story