உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்


உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Jan 2017 4:15 AM IST (Updated: 13 Jan 2017 2:32 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று சி.ஐ.டி.யூ. ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திருச்சி,

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநகர் மாவட்ட தலைவர் பக்ருதீன் பாபு தலைமை தாங்கினார். ஆட்டோ பதிவு கட்டணம் ரூ.860-ல் இருந்து 1860, பயிற்றுனர் உரிம கட்டணம் ரூ.90-ல் இருந்து ரூ.730, ஓட்டுனர் உரிமம் ரூ.200-ல் இருந்து ரூ.1300 , ஆர்.சி. புத்தகத்தில் கடன் பதிவு ரூ.250- ல் இருந்து 3050, லேட் எப்.சி. மாத கட்டணம் ரூ.50 ல் இருந்து ரூ.1500 ஆகவும் உயர்த்தப்பட்டு இருப்பதை திரும்ப பெற வேண்டும் என கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகளை விளக்கி சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ரெங்கராஜன், பொது செயலாளர் வீரமுத்து, அமைப்பு செயலாளர் சந்திரன், மணிகண்டன்ஆகியோர் பேசினார்கள். முடிவில் மாவட்ட பொருளாளர் கோபி நன்றி கூறினார். முன்னதாக ஆட்டோ டிரைவர்கள் வெஸ்ட்ரி பள்ளி அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர்.

Next Story