100 நாள் வேலைக்கு சம்பளம் வழங்க கோரி பெண்கள் மனு
புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர்.
புதுக்கோட்டை,
அந்த மனுவில், தாங்கள் வடவாளம் ஊராட்சியில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய 4 மாதங்களாக 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் வேலை பார்த்து உள்ளோம். இதுவரை எங்களது வங்கி கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படவில்லை. நாங்கள் தினமும் வங்கிக்கு அலைந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் எங்களுக்கு இதுவரை பணம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நாளை(சனிக்கிழமை) பொங்கல் பண்டிகை வருகிறது. எனவே இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சம்பளம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், என்று கூறியிருந்தனர்.

Next Story