வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
கறம்பக்குடி,
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் அனைத்து அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று கறம்பக்குடி அருகே உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நால்ரோடு பஸ் நிறுத்தம் வந்தனர். அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைதொடர்ந்து மாணவ, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அறந்தாங்கியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அறந்தாங்கி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியிலும் மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story