கிறிஸ்தவ தேவாலயங்கள் சீரமைப்பு பணிக்கு நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம்
அரியலூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் சீரமைப்பு பணிக்கு நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக் டர் சரவணவேல்ராஜ் கூறியுள்ளார்.
அரியலூர்,
சீரமைப்பு பணி
அரியலூர் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நடப்பாண்டில் (2016-17) நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் கிறிஸ்தவ தேவாலயங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த நிதிஉதவி பெறு வதற்கு கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும். தேவாலயமும் பதிவு செய்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கலாம்
தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டில் இருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது. சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும். இதற்கான விண்ணப்ப படிவத்தை www.bc-m-b-cm.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் மாவட்ட கலெக்டர், மாவட்ட ஆட்சியரகம், அரியலூர் என்ற முகவரிக்கு 31.1.2017 அன்று மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story