ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்க கோரி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்க கோரி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Jan 2017 4:15 AM IST (Updated: 13 Jan 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

பெரம்பலூர்,

அந்த வகையில் நேற்று பெரம்பலூரில் உள்ள குரும்பலூர் பாரதிதாசன் கல்லூரி மாணவர்கள் கல்லூரி நுழைவு வாயில் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின்போது, ஜல்லிக்கட்டிற்கு எதிராக செயல்படும் அனைத்து அமைப்புகளையும் மத்திய அரசு தடை செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Next Story