சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு உடைந்து விழுந்தது


சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு உடைந்து விழுந்தது
x
தினத்தந்தி 13 Jan 2017 4:00 AM IST (Updated: 13 Jan 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

ஆலந்தூர், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இங்கு இதுவரை மேற்கூரைகள் இடிந்து விழுந்தது, தானியங்கி கண்ணாடி கதவுகள் உடைந்து விழுந்தது என 72 முறை அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இந்நிலையில் 73–வது முறையாக, நேற்று முன்தினம் நள்ளிரவு உள்நாட்டு முனையம் வருகை பகுதியில் தானியங்கி கண்ணாடி கதவு திடீரென உடைந்து விழுந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுபற்றி விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘பயணி ஒருவர் டிராலியை தள்ளிக்கொண்டு சென்றபோது தானியங்கி கண்ணாடி கதவு மீது இடித்ததால் அது உடைந்து விழுந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.


Next Story