பாபநாசத்தில் 122 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்– திருமண உதவித்தொகை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்


பாபநாசத்தில் 122 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்– திருமண உதவித்தொகை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்
x
தினத்தந்தி 13 Jan 2017 4:15 AM IST (Updated: 13 Jan 2017 3:55 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசத்தில் 122 பயனாளிகளுக்கு தாலிக்கும் தங்கம் மற்றும் திருமண உதவித்தொகையை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார். திருமண நிதி உதவி திட்டம் பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவி

பாபநாசம்,

பாபநாசத்தில் 122 பயனாளிகளுக்கு தாலிக்கும் தங்கம் மற்றும் திருமண உதவித்தொகையை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.

திருமண நிதி உதவி திட்டம்

பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு கலந்துகொண்டு 122 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை வழங்கினார். மேலும், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விபத்து நிவாரண உதவி தொகை, இயற்கை மரண உதவித் தொகை என 20 பயனாளிகளுக்கு உதவி தொகைக்கான காசோலைகளும், 21 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளும் வழங்கி பேசினார். முன்னதாக ராஜகிரியில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி விலையில்லா வேட்டி–சேலைகளை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார். இதில் ரெங்கசாமி எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. ராம்குமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.மோகன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கே.கோபிநாதன் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் வெ.பாக்கியலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



Next Story