முன்விரோதத்தில் வாலிபர் குத்திக்கொலை ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கைது


முன்விரோதத்தில் வாலிபர் குத்திக்கொலை ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கைது
x
தினத்தந்தி 13 Jan 2017 4:00 AM IST (Updated: 13 Jan 2017 4:00 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே முன்விரோதத்தில் வாலிபரை கத்தியால் குத்திக்கொலை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். முன்விரோதம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பழவத்தான் கட்டளை டாக்டர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பவுன்ராஜ். அ.தி.மு.க.பிரமு

திருவிடைமருதூர்,

கும்பகோணம் அருகே முன்விரோதத்தில் வாலிபரை கத்தியால் குத்திக்கொலை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

முன்விரோதம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பழவத்தான் கட்டளை டாக்டர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பவுன்ராஜ். அ.தி.மு.க.பிரமுகர். இவருடைய மகன்கள் சுந்தரபாண்டியன்(வயது32), மருதுபாண்டியன்(30), கார்த்தி(26). இவர்கள் 3 பேரும் கட்டிடத்திற்கு கம்பி கட்டும் தொழிலாளிகள். அதே பகுதியை சேர்ந்தவர் அன்பழகன்(55). இவருடைய மகன்கள் அன்புநிதி, அருள்நிதி, அறிவுநிதி, அழகுநிதி. இவர்களுக்கும் பவுன்ராஜ் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

கத்திக்குத்து

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுந்தரபாண்டியன் குடும்பத்தினருக்கும், அன்பழகன் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் பவுன்ராஜ் மற்றும் அவரது மகன்கள் சுந்தரபாண்டியன், கார்த்தி ஆகியோரை அன்பழகன் தரப்பினர் கத்தியால் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தரபாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார். பவுன்ராஜ் மற்றும் கார்த்தி ஆகிய 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

5 பேர் கைது

இதுகுறித்து பவுன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் நாச்சியார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகன் மற்றும் அவருடைய மகன்கள் அறிவுநிதி, அழகுநிதி, அன்புநிதி, அருள்நிதி ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தியை பறிமுதல் செய்தனர். இதையடுத்து 5 பேரையும் போலீசார் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர்.முன்விரோதத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story