குண்டலுபேட்டை தாலுகாவில் இருந்து களிகவுடனஹள்ளி கேட் வரை உள்ள குண்டும், குழியுமான சாலையை துருவநாராயண் எம்.பி. நேரில் ஆய்வு


குண்டலுபேட்டை தாலுகாவில் இருந்து களிகவுடனஹள்ளி கேட் வரை உள்ள குண்டும், குழியுமான சாலையை துருவநாராயண் எம்.பி. நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 13 Jan 2017 4:14 AM IST (Updated: 13 Jan 2017 4:14 AM IST)
t-max-icont-min-icon

குண்டலுபேட்டை தாலுகாவில் இருந்து களிகவுடனஹள்ளி கேட் வரை உள்ள குண்டும், குழியுமான சாலையை துருவநாராயண் எம்.பி. நேரில் பார்வை.

கொள்ளேகால்

ரூ.48 கோடி நிதி ஒதுக்கீடு

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவில் இருந்து பந்திப்பூர் வனப்பகுதி வழியாக களிகவுடனஹள்ளி கேட் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக உள்ளது. அதை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் அந்த சாலையை சீரமைக்க ரூ.48 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்மூலம் சாலை சீரமைப்பு பணி விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், நேற்று துருவநாராயண் எம்.பி. குண்டலுபேட்டை தாலுகாவில் இருந்து களிகவுடனஹள்ளி கேட் வரை உள்ள குண்டும், குழியுமான சாலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் அவர் பல்வேறு தகவல்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சாலையை சீரமைக்கும் பணிகள்...

குண்டலுபேட்டை தாலுகாவில் இருந்து பந்திப்பூர் வனப்பகுதி வழியாக களிகவுடனஹள்ளி வரை செல்லும் சாலையை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. மேலும் அந்த சாலையை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளோம். இதற்காக சில மரங்களை வெட்ட வேண்டி இருக்கிறது.

அதற்கு வனத்துறை இன்னும் அனுமதி வழங்கவில்லை. வனத்துறையிடம் அனுமதி கோரியுள்ளோம். அவர்கள் அனுமதி வழங்கியவுடன் சாலையை விரிவுபடுத்தும் பணிகளை தொடங்குவோம். அதற்கும் முன் சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சட்டத்தில் இடம் கிடையாது

இதற்கிடையே இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒசமட் கூறுகையில், ‘‘வனப்பகுதியில் உள்ள மரங்களை வெட்ட எங்களால் அனுமதி வழங்க முடியாது. அதற்கு சட்டத்திலும் இடம் கிடையாது. இதுகுறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும்’’ என்று கூறினார்.



Next Story