பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 13 Jan 2017 4:41 AM IST (Updated: 13 Jan 2017 4:41 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் கடைவீதியில் மக்கள் கூட்டம் அலை மோதியது. கரும்பு, மஞ்சள் கொத்து விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

திருவாரூர்,

மக்கள் கூட்டம் அலைமோதியது

பொங்கல் பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுப்பானையில் பச்சை அரிசி வைத்து பொங்கலிட்டு வழிபடுவர். பால் பொங்கி வரும் போது பொங்கலோ, பொங்கல் என மகிழ்ச்சி ஆரவாரம் செய்வது வழக்கம். வழிபாட்டில் கரும்பு, வாழை, மஞ்சள் கொத்துக்களுக்கு முக்கிய இடம் பிடிக்கும். பொங்கலை முன்னிட்டு திருவாரூர் கடைவீதியில் மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது.

கிராமப்புறங்களில் இருந்து கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்துக்கள் விற்பனைக்காக வந்து குவிந்தன. சாலையின் இருபுறங்களில் கரும்பு கட்டுகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு மும்முரமாக விற்பனை நடைபெற்று வருகிறது. இதுமட்டுமின்றி அனைத்து திசைகளிலும் வாழை தார்கள் காட்சியளித்தன. பொங்கல் பண்டிகைக்காக திருவாரூர் நகரமே விழா கோலம் பூண்டுள்ளது.



Next Story