விழிப்புணர்வு முகாம்
வார்தா புயலின் காரணமாக தொழிற்சாலை கூரைகளில் ஏற்பட்ட சேதங்களை சரி செய்யும் பணி அனைத்து தொழிற்சாலைகளில் நடந்து வருகிறது.
வண்டலூர்,
வார்தா புயலின் காரணமாக தொழிற்சாலை கூரைகளில் ஏற்பட்ட சேதங்களை சரி செய்யும் பணி அனைத்து தொழிற்சாலைகளில் நடந்து வருகிறது. உயரமான மேற்கூரை சீரமைக்கும் போது தொழிலாளர்களுக்கு ஏற்படும் விபத்தை தடுக்கும் பொருட்டு தொழிற்சாலைகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரின் அறிவுரையின் பேரில் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் ஒரகடம் டான்போஸ் நிறுவனத்தின் பயிற்சி அரங்கில் நடந்தது.
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் அலுவலகங்களின் கூடுதல் இயக்குனர் பொன்சிங் மோகன்ராம் தலைமை தாங்கினார். இணை இயக்குனர் துரைராஜ் மற்றும் டான்போஸ் நிறுவனத்தின் தலைவர் ரவிச்சந்திரன் புருஷோத்தமன் சிறப்புரையாற்றினர். துணை இயக்குனர் குமார், உயரத்தில் பணிசெய்யும் போது கடைப்பிடிக்ககூடிய பாதுகாப்பு குறித்து பயிற்சி வகுப்பு நடத்தினார். இயக்கத்தின் மருத்துவர் நாகேந்திரன் தொழிலார்களின் உடல்நலம் மற்றும் உயரத்தில் பணிபுரியும்போது ஏற்படும் அபாயம் குறித்து எடுத்துரைத்தார். துணை இயக்குனர் இளங்கோவன் நன்றி கூறினார்.
முகாமில் ஒரகடம் தொழிற்பேட்டை, மறைமலை நகர் தொழிற்பேட்டை அமைந்துள்ள 50 தொழிற்சாலைகளை சேர்ந்த 106 பிரதிநிதிகள் கலந்துகொண்டு பயன் அடைந்தார்கள். டான்போஸ் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி டேவிட் பிரதிநிதிகளை வரவேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.