கோவில்பட்டியில் லாரி, மினிவேன் பேட்டரி, டயர்களை திருடிவிட்டு 2 கார்களுக்கு தீவைப்பு மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு


கோவில்பட்டியில் லாரி, மினிவேன் பேட்டரி, டயர்களை திருடிவிட்டு 2 கார்களுக்கு தீவைப்பு மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 14 Jan 2017 2:00 AM IST (Updated: 13 Jan 2017 7:24 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மினிவேன், லாரியில் பேட்டரி, டயர்களை திருடி விட்டு 2 கார்களுக்கு தீ வைத்து சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கோவில்பட்டி இலுப்பையூரணியைச் சேர்ந்த பூல்தேவர் மகன் செண்பகராஜ் (வயது 33). இவர், கோவில்பட்டி வேலாயுதபுரம் வளைவு ரோட்டில் வாகன

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் மினிவேன், லாரியில் பேட்டரி, டயர்களை திருடி விட்டு 2 கார்களுக்கு தீ வைத்து சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவில்பட்டி இலுப்பையூரணியைச் சேர்ந்த பூல்தேவர் மகன் செண்பகராஜ் (வயது 33). இவர், கோவில்பட்டி வேலாயுதபுரம் வளைவு ரோட்டில் வாகனங்களை பழுது பார்க்கும் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.

இவரது பக்கத்து கடையில் கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த அகிலேஷ்குமார் (28) வாகனங்களுக்கு வர்ணம் பூசும் கடை நடத்தி வருகிறார். இதற்கு அடுத்த கடையில் கோவில்பட்டி வேலாயுதபுரத்தைச் சேர்ந்த துரை (45) வாகனங்களில் டிங்கரிங் வேலை செய்து வருகிறார்.

டயர்கள், பேட்டரி திருட்டு

இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் தங்களது கடைகளை பூட்டிச் சென்றனர். பின்னர் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், கடைகளின் முன்பு நிறுத்தி இருந்த மினி வேனின் பின்பக்க 2 டயர்களை திருடியுள்ளனர். பின்னர் அங்கு நிறுத்தி இருந்த லாரியில் பேட்டரியை திருடினர்.

மேலும் ஒர்க்ஷாப் கடையின் பூட்டை உடைத்து திறந்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கிருந்த 40 லிட்டர் டீசலை கேனுடன் திருடியுள்ளனர். பின்னர் அங்கு நிறுத்தி இருந்த 2 காருக்கு தீவைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கார்களுக்கு தீவைப்பு

அந்த வழியாக சென்றவர்கள் தீ எரிவதை பார்த்து கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு நிலைய அதிகாரி வீரலட்சுமணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து, சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் ஒரு கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. மற்றொரு காரின் முன்பகுதி தீயில் எரிந்து சேதம் அடைந்தது.

மர்மகும்பலுக்கு வலைவீச்சு

தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்ததால், அதன் அருகில் இருந்த ஏராளமான வாகனங்கள் தீயில் சேதம் அடையாமல் தப்பின. இதுகுறித்த புகாரின்பேரில், கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் வழக்குப்பதிவு செய்து, வாகனங்களில் பேட்டரி, டயர்களை திருடி விட்டு, தீ வைத்து சென்ற மர்மகும்பலை தேடி வருகிறார்.


Next Story