பாளையங்கோட்டையில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தி.மு.க. ஆர்ப்பாட்டம் சட்டக்கல்லூரி மாணவர்கள் மோட்டார் சைக்கிள் ஊர்வலம்
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் பொங்கல் விழாவில் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையொட்டி நெல்லை மத்திய மாவட்டம், கிழக்கு ம
நெல்லை,
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்பொங்கல் விழாவில் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையொட்டி நெல்லை மத்திய மாவட்டம், கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள ஜோதிபுரம் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப், கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். எம்.எல்.ஏ.க்கள் பூங்கோதை, லட்சுமணன், முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, அவை தலைவர் சுப.சீதாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, நெசவாளர் அணி மாநில செயலாளர் பெருமாள், முன்னாள் மேயர் உமா மகேசுவரி, மத்திய மாவட்ட பொருளாளர் அருண்குமார், மாவட்ட பிரதிநிதி ரைமண்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊர்மக்கள் எதிர்ப்புஇந்த ஆர்ப்பாட்டத்துக்காக ஜோதிபுரம் திடலில் ஒரு பகுதியில் பெரிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதை சுற்றிலும் டிஜிட்டல் பேனர் மற்றும் கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. தி.மு.க.வினர் மேடையில் ஏறி ஆர்ப்பாட்டத்தை தொடங்கும் சூழ்நிலையில் ஜோதிபுரம் ஊரை சேர்ந்தவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து தி.மு.க.வினர் மெயின் ரோட்டின் அருகில் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டக்கல்லூரி மாணவர்கள்இதே போல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி நெல்லை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடத்தினார்கள். நெல்லை –தூத்துக்குடி மெயின் ரோட்டில் உள்ள சட்டக்கல்லூரி முன்பு இருந்து இந்த ஊர்வலம் தொடங்கியது. சமாதானபுரம், பாளையங்கோட்டை பஸ் நிலையம், முருகன்குறிச்சி, வண்ணார்பேட்டை வழியாக கொக்கிரகுளத்தில் உள்ள நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தது.
பின்னர் மாணவ பிரதிநிதிகள் கலெக்டர் கருணாகரனை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தனர்.