காதலன் வீட்டின் முன்பு இளம்பெண் தர்ணா


காதலன் வீட்டின் முன்பு இளம்பெண் தர்ணா
x
தினத்தந்தி 14 Jan 2017 1:30 AM IST (Updated: 13 Jan 2017 9:11 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் தர்மர். இவருடைய மகன் தர்மலிங்கம் (25). இவர் சென்னையில் மளிகை கடையில் வேலை செய்து வருகிறார்.

சாத்தான்குளம்,

சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் தர்மர். இவருடைய மகன் தர்மலிங்கம் (25). இவர் சென்னையில் மளிகை கடையில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் பழனிசெல்வன் மகள் முத்துலட்சுமி (22). பீடி சுற்றும் தொழிலாளி. இவர்கள் 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இவர்களது திருமணத்துக்கு தர்மலிங்கத்தின் தாயார் எதிர்ப்பு தெரிவித்தார்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு அங்குள்ள கோவிலில் இவர்களுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது தர்மலிங்கம் திடீரென்று மாயமாகி விட்டார். இதுகுறித்து முத்துலட்சுமி திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பின்னர் அவர் கடந்த 3 நாட்களாக தர்மலிங்கத்தின் வீட்டின் முன்பு அமர்ந்து, பீடி சுற்றியவாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story