ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை
ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை
கடலூர்,
ஊர்வலம்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த நூற்றுக்கணக்கான தி.மு.க.வினர் பாரதிசாலையில் உள்ள நகர தி.மு.க. அலுவலகத்தில் இருந்து மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன கோஷங்களை முழங்கியவாறு ஊர்வலமாக தலைமை தி.மு.க. அலுவலகம் அருகே வந்தனர். அங்கு எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
மோடி இரட்டை வேடம்ஆர்ப்பாட்டத்தில் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ. பேசியதாவது:–
தமிழர்களுக்கு விரோதமாக மோடி அரசு நடக்கிறது. பொய்யான வாக்குறுதிகளை சொல்லி ஆட்சிக்கு வந்த மோடி குஜராத்தில் செல்வாக்கை இழந்து விட்டார். குஜராத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத மோடி அரசு, உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்ட தடையை மட்டும் விலக்க முடியாது என மறுக்கிறது. ஜல்லிக்கட்டு பிரச்சினையில் மோடி அரசு இரட்டை வேடம் போடுகிறது. தமிழகத்தில் ஒரு ஆட்சி நடக்கிறதா? என்ன என்பதே தெரியவில்லை.
இவ்வாறு எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் துரை.கி.சரவணன் எம்.எல்.ஏ., மாநில மாணவர் அணி செயலாளர் இள.புகழேந்தி, மாவட்ட அவைத்தலைவர் தங்கராஜ், கடலூர் நகர செயலாளர் ராஜா, நிர்வாகிகள் செந்தில்குமார், சிவகுமார், பாலமுருகன், முன்னாள் நகரசபை தலைவர் ராஜேந்திரன், தமிழரசன், கோவிந்தராஜ், வக்கீல்கள் வனராஜ், பிரபுமுத்து மற்றும் அகஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விருத்தாசலம்இதேப்போல் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விருத்தாசலம் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ, மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபாலகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ குழந்தைதமிழரசன், மாவட்ட பொருளாளர் பாவாடை கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர செயலாளர் தண்டபாணி வரவேற்றார்.
இதில் மாவட்ட துணை செயலாளர்கள் தணிகைசெல்வம், அரங்கபாலகிருஷ்ணன், ஆனந்திசரவணன், ஒன்றிய செயலாளர்கள் கனககோவிந்தசாமி, வேல்முருகன், பட்டூர்அமிர்தலிங்கம், சின்னசாமி, செங்குட்டுவன், கோதண்டபாணி, ராதாகிருஷ்ணன், நகர செயலாளர்கள் ராஜேந்திரன், மணிவண்ணன், பக்கிரிசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அமைப்பாளர் செயலாளர் ராமு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அறிவுடையநம்பி நன்றி கூறினார்.