தஞ்சை பெரியகோவிலில் நந்தியம்பெருமானுக்கு மகரசங்கராந்திப்பெருவிழா இன்று தொடங்குகிறது


தஞ்சை பெரியகோவிலில் நந்தியம்பெருமானுக்கு மகரசங்கராந்திப்பெருவிழா இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 14 Jan 2017 4:00 AM IST (Updated: 13 Jan 2017 10:48 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை பெரியகோவிலில் நந்தியம்பெருமானுக்கு மகரசங்கராந்திப்பெருவிழா இன்று தொடங்குகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில்

தஞ்சை பெரியகோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் இந்த கோவில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த கோவிலில் மிகப்பெரிய நந்தியம் பெருமான் சிலை உள்ளது. இந்த நந்தியபெருமானுக்கு மகரசங்கராந்தி விழா பொங்கல் பண்டிகையொட்டி இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இன்று மாலை நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெறுகிறது.

காய்கறிகளால் அலங்காரம்

நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாட்டுப்பொங்கலை யொட்டி நந்தியம்பெருமானுக்கு பழங்கள், காய்கறிகள், மலர்கள் மற்றும் இனிப்புவகைகளால் அலங்காரம் செய்யப்படுகிறது. அதைத்தொடர்ந்து கோபூஜையும், பின்னர் அன்னதானமும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர்கள் ரவிச்சந்திரன், சுரேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.


Next Story