ரோடுகளை சீரமைக்கக்கோரி சாலை மறியல் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 19 பேர் கைது
ஈரோடு மாநகராட்சியில் ரோடுகளை சீரமைக்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முகமது லுக்மானுல் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சாதிக் பாட்ஷா முன்னிலை வகித்தார். மாவட்ட செ
ஈரோடு,
ஈரோடு மாநகராட்சியில் ரோடுகளை சீரமைக்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முகமது லுக்மானுல் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சாதிக் பாட்ஷா முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பஜ்ஜல் ரகுமாதன், முனாப், அப்துல்ரகுமான் உள்பட 19 பேர் கலந்து கொண்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 19 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
Next Story