வைகை அணையில் 5 ஆண்டுகளாக காட்சி பொருளான ரோந்து படகுகள்


வைகை அணையில் 5 ஆண்டுகளாக காட்சி பொருளான ரோந்து படகுகள்
x
தினத்தந்தி 14 Jan 2017 3:15 AM IST (Updated: 13 Jan 2017 11:03 PM IST)
t-max-icont-min-icon

வைகை அணையில் அதிகாரிகள் ரோந்து செல்வதற்காக வழங்கப்பட்ட ரோந்து படகுகள் பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப் பொருளாக உள்ளது.

ரோந்து படகுகள்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரமுள்ள வைகை அணையில் தேக்கப்படும் தண்ணீரில் மீன்வளத்துறை சார்பில் கட்லா, ரோகு, மிருகால் உள்ளிட்ட மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. அணையில் வளர்க்கப்படும் மீன்களை மீனவர் கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்த மீனவர்கள், படகு மூலம் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இருப்பினும் அணையை சுற்றியுள்ள பகுதிகளில் சிலர் திருட்டுத்தனமாக மீன்களை பிடித்து வருகின்றனர். இவற்றை தடுக்கும் வகையில் மீன்வளத்துறை அதிகா£ரிகள் அணைப்பகுதிகளில் படகு மூலம் அவ்வபோது ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீன்வளத்துறை அதிகாரிகள் ரோந்து செல்லும் வகையில் வைகை அணையில் செயல்படும் மீன்வளத்துறை அலுவலகத்திற்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 3 படகுகள் வழங்கப்பட்டது. இந்த படகில் ஒரே நேரத்தில் 6 பேர் அமர்ந்து செல்ல முடியும். மேலும் அணையில் முழுக்கொள்ளவை எட்டும் போது 10 கிலோ மீட்டர் சுற்றளவில் தண்ணீர் தேங்கி இருக்கும். அப்போது தொலை தூரத்தில் விரைவாக ரோந்து செல்ல இந்த நவீன படகு உபயோகமாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காட்சி பொருளாக...

ஆனால் இந்த படகு இதுவரை பயன்படுத்தப்படாமல் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் மதிப்பிலான படகுகள் சேதமடைந்து வருகிறது. பயன்பாடிற்கு வராத நவீன ரோந்து படகுகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று மீனவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் வைகை அணை மீன்வள உதவி இயக்குனர் அலுவலக வளாகத்தில் ரோந்து படகுகள் காட்சிப் பொருளாக காணப்படுகிறது.


Next Story