கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2017 3:30 AM IST (Updated: 13 Jan 2017 11:11 PM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் போஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு கலந்தாய்வு மூலம் மாறுதல் வழங்க வேண்டும், சத்துணவு அமைப்பாளர்க

நிலக்கோட்டை,

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் போஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு கலந்தாய்வு மூலம் மாறுதல் வழங்க வேண்டும், சத்துணவு அமைப்பாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு படியாக ரூ.600 வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் சங்க கிளை செயலாளர் ஜோதியமம்£ள், மாவட்ட இணை செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்,துணை தலைவர்கள், இணை செயலாளர்கள், சங்க உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Next Story