சுப்பிரமணியசாமி உருவப்படம் எரிப்பு: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது


சுப்பிரமணியசாமி உருவப்படம் எரிப்பு: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது
x
தினத்தந்தி 14 Jan 2017 3:15 AM IST (Updated: 14 Jan 2017 12:05 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி தமிழர்களுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் காந்திபுரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கோவை,

பா.ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி தமிழர்களுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் காந்திபுரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள் சுப்பிரமணியசாமியின் உருவப்படத்தை எரித்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஆறுச்சாமி, கோபால், பிரபு உள்பட 20 பேர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.


Next Story