உடுமலையில் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


உடுமலையில் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2017 3:30 AM IST (Updated: 14 Jan 2017 12:23 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு நடைபெற உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்

உடுமலை,

ஜல்லிக்கட்டு நடைபெற உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், உடுமலை கச்சேரி வீதியில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகே நேற்று மத்திய-மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தலைமை தாங்கினார்.

மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமகிருஷ்ணன், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் ராஜமாணிக்கம், உடுமலை நகர செயலாளர் எம்.மத்தீன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் கனகராஜ், பொருளாளர் முபாரக் அலி, முன்னாள் நகராட்சி தலைவர் செ.வேலுச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் யு.என்.பி. ராஜலட்சுமி பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது

Next Story