ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2017 3:30 AM IST (Updated: 14 Jan 2017 12:33 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரியும், பீட்டா அமைப்பை தடைசெய்ய கோரியும் ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நேற்று கல்லூரி மாணவர்கள் மற்றும் ஜெயங்கொண்டத்தை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த வாலிபர்கள், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரியும், பீட்டா அமைப்பை தடைசெய்ய கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னதாக அவர்கள் காந்திபூங்கா எதிரில் இருந்து ஊர்வலம் சென்றனர். இந்த ஊர்வலம் நான்கு ரோடு, திருச்சி ரோடு வழியாக சென்று அண்ணாசிலையில் முடிவடைந்தது. ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் காளை வளர்ப்போர், மாடுபிடிக்கும் வீரர்கள், ஜல்லிக்கட்டு விழா நடத்துவோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.

இதேபோல் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பேரவை சார்பில் அமைதி ஊர்வலம் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலத்தில் நேற்று நடந்தது. ஊர்வலத்துக்கு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பேரவையின் ஒன்றிய செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். அன்னமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், ஊரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று முடிவில் மீண்டும் பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தின் போது ஜல்லிக்கட்டு காளையையும் உடன் அழைத்து வந்தனர். அப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷமும் எழுப்பப்பட்டது. 

Next Story