சேலத்தில், விலையில்லா பொருட்கள் வழங்காததால் ரேஷன் கடையை முற்றுகை
சேலம் பொன்னம்மாபேட்டை செங்கல் அணை பகுதியில் ரேஷன் கடை ஒன்று உள்ளது.
சேலம்,
சேலம் பொன்னம்மாபேட்டை செங்கல் அணை பகுதியில் ரேஷன் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் நேற்று காலை விலையில்லா பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. இதனால் பெண்கள் உள்பட பலர் அங்கு திரண்டு வந்தனர். அப்போது ரேஷன் கடையில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வேட்டி, சேலை மற்றும் விலையில்லா பொருட்கள் கொடுத்ததாக பெண்கள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து ஆத்திரமடைந்த பெண்கள் அந்த கடையை திடீரென முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார், பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்களை போலீசார் வரிசைப்படுத்தி பொருட்கள் வாங்க நடவடிக்கை எடுத்தனர்.
Next Story