பெரம்பலூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் தமிழர் திருநாளை ஒட்டி தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மத்திய அரசை வலியுறுத்தியும்,
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் தமிழர் திருநாளை ஒட்டி தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மத்திய அரசை வலியுறுத்தியும், உச்சநீதிமன்ற தடை உத்தரவை விலக்க வலியுறுத்தியும் தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குன்னம்ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத் தில் மாவட்ட அவைத்தலைவர் நடராஜன், பெரம்பலூர் நகர செயலாளர் முத்துரத்னா பிரபாகரன், செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ஓவியர் முகுந்தன், மாநில மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் வல்லபன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் துரைசாமி, ராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, அண்ணாதுரை, மதியழகன், நல்லதம்பி, பாடாலூர் மதியழகன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story