சிறப்பு கிராமசபை கூட்டம்
தோகைமலை ஒன்றியம் கூடலூர், சின்னையம்பாளையம், ஆர்ச்சம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தமிழக அரசின் வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்வது குறித்து சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடந்த கூட்டத்திற்கு, ஒன்
தோகைமலை
தோகைமலை ஒன்றியம் கூடலூர், சின்னையம்பாளையம், ஆர்ச்சம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தமிழக அரசின் வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்வது குறித்து சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய ஆணையர் கனகராஜ் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் மேகநாதன், கால்நடை மருத்துவர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கூடலூர், சின்னையம்பாளையம், ஆர்ச்சம்பட்டி ஆகிய ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். இவர்களில் கூடலூர் ஊராட்சியில் 142 பயனாளிகள், சின்னையம்பாளையத்திற்கு 33 பயனாளிகள், ஆர்ச்சம்பட்டிக்கு 37 பயனாளிகள் என அரசு ஒதுக்கீடு செய்த 212 பயனாளிகள் தகுதி குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
இந்த தீர்மானத்தில் பெண் உறுப்பினர்கள் மட்டுமே பயனாளியாக விண்ணப்பிக்க வேண்டும். நிலமற்ற விவசாய தொழிலாளியாக இதே ஊராட்சியில் வசிக்க வேண்டும். ஏற்கனவே கால்நடைகள் சொந்தமாக இருத்தல் கூடாது. குடும்ப உறுப்பினர்கள் அரசு துறை வேலை மற்றும் மக்கள் பிரதிநிதிகளாக இருத்தல் கூடாது. தேர்வு செய்யும் பயனாளிகள் 2 ஆண்டுகளுக்கு அரசு வழங்கும் ஆடுகளை விற்பனை செய்ய கூடாது. குறைந்தது 30 சதவீதம் ஆதிதிராவிடர் இனத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சையதுஅஜிமுதின், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்ரமணி, ஊராட்சி செயலாளர்கள் நேசமணி, வரதராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் கரும்பாச்சலம், பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.