ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள்


ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 14 Jan 2017 4:00 AM IST (Updated: 14 Jan 2017 12:50 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி காளை மாடுகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

காளை மாடுகளை...

கரூர் மாவட்டம் ஆர்.டி.மலையை சேர்ந்த பொதுமக்கள் பலர் நேற்று 3 காளை மாடுகளை ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு கலெக்டர் அலுவலகம் அருகே வந்தனர். பின்னர் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி கலெக்டரிடம் மனு கொடுக்க காளை மாடுகளை அழைத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கலெக்டர் அலுவலகத்திற்குள் காளை மாடுகளுடன் செல்ல வேண்டாம். 5 பேர் சென்று மனு கொடுங்கள் என்று கூறினர்.

கோரிக்கை மனு

அதற்கு அவர்கள் 10 பேர் சென்று மனு கொடுக்கிறோம் என்று பதில் அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் உள்ளே செல்ல அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் உள்ளே சென்றனர்.அங்கு கலெக்டர் இல்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டரிடன் நேர்முக உதவியாளரிடம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் கலெக்டரிடம் மனுவை கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

200 ஆண்டுகள்

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் 200 ஆண்டுகளுக்கு மேலாக பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்தி வருகிறோம். ஆனால் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளோம் என்றனர். 

Next Story