மணப்பாறையில் காளைகளுடன் கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சியினர் ஊர்வலம்


மணப்பாறையில் காளைகளுடன் கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சியினர் ஊர்வலம்
x
தினத்தந்தி 14 Jan 2017 4:00 AM IST (Updated: 14 Jan 2017 1:09 AM IST)
t-max-icont-min-icon

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த பகுதியிலும் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் தமிழர்களும் காத்திருந்த வேளையில் இதுவரை ஜல்லிக்

மணப்பாறை

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த பகுதியிலும் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் தமிழர்களும் காத்திருந்த வேளையில் இதுவரை ஜல்லிக்கட்டுக்கான எந்த அறிவிப்பும் வராதது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களை வேதனையடையச் செய்துள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கிட வேண்டும், மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்டம் மணப்பாறை பஸ் நிலையம் அருகே இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் சில அரசியல் கட்சியினர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஜல்லிக்கட்டு குறித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். பின்னர் அங்கிருந்து ஜல்லிக்கட்டு காளையுடன் ஊர்வலமாக பெரியார் சிலை வரை சென்றனர். அப்போது பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டுக்கான அனுமதி வேண்டும். உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர்.


Next Story