ரெயில் மறியல் போராட்டம்: ஆட்டோ தொழிலாளர்கள் 60 பேர் கைது


ரெயில் மறியல் போராட்டம்: ஆட்டோ தொழிலாளர்கள் 60 பேர் கைது
x
தினத்தந்தி 14 Jan 2017 3:30 AM IST (Updated: 14 Jan 2017 1:31 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் ரெயில் மறியல் போராட்டம் நடத்திய ஆட்டோ தொழிலாளர்கள் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

தண்டவாளத்தில் அமர்ந்தனர்

போக்குவரத்து துறையின் மூலமாக நடக்கும் 28 விதமான பணிகளுக்கான கட்டணங்களை மத்திய அரசு கடுமையாக உயர்த்தி உள்ளது. இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

புதுச்சேரியில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில ஆட்டோ தொழிலாளர் நலச்சங்கத்தினர் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். வாணரப்பேட்டை ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் அமர்ந்தனர்.

இந்த போராட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் அபிசேகம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சேதுசெல்வம் உள்பட பலர் மறியலில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் சென்னையில் இருந்து புதுச்சேரி வந்த ரெயிலை ரெயில் நிலைய பகுதியில் ஆட்டோ தொழிலாளர்கள் மறித்தனர். இதனால் ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.

60 பேர் கைது

இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மறியலில் ஈடுபட்டர்களை கைது செய்தனர். அப்போது 60 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் சிறிது நேரம் தங்க வைக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story