தீயணைப்பு நிலையத்தில் கிரண்பெடி ஆய்வு


தீயணைப்பு நிலையத்தில் கிரண்பெடி ஆய்வு
x
தினத்தந்தி 14 Jan 2017 3:15 AM IST (Updated: 14 Jan 2017 1:31 AM IST)
t-max-icont-min-icon

புதுவை தீயணைப்பு நிலையத்தில் அடிப்படை வசதிகளின்றி இருப்பதாக செய்திகள் வெளியாகின. பணிநெருக்கடி இருப்பதாக ஊழியர்களும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இதன் எதிரொலியாக கவர்னர் கிரண்பெடி நேற்று புதுவை தீயணைப்பு நிலையத்துக்கு சென்றார். அங்கு தீயணைப்பு வீரர்களுக்க

புதுச்சேரி,

புதுவை தீயணைப்பு நிலையத்தில் அடிப்படை வசதிகளின்றி இருப்பதாக செய்திகள் வெளியாகின. பணிநெருக்கடி இருப்பதாக ஊழியர்களும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இதன் எதிரொலியாக கவர்னர் கிரண்பெடி நேற்று புதுவை தீயணைப்பு நிலையத்துக்கு சென்றார். அங்கு தீயணைப்பு வீரர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது தலைமை செயலாளர் மனோஜ் பரிதா, அரசு செயலாளர் மிகிர் வரதன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். தீயணைப்பு நிலையத்தில் ஆய்வு நடத்திய கவர்னர் சிறிது நேரம் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். அதன்பின் கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார்.


Next Story