புதுச்சேரி அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜான்குமார் பதவி ஏற்றார்


புதுச்சேரி அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜான்குமார் பதவி ஏற்றார்
x
தினத்தந்தி 14 Jan 2017 3:15 AM IST (Updated: 14 Jan 2017 1:31 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜான்குமார் பதவி ஏற்றுக்கொண்டார்.

ஜான்குமார்

புதுவை சட்டமன்ற தேர்தலின்போது நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஜான்குமார். முதல்–அமைச்சரின் பாராளுமன்ற செயலாளராக செயல்பட்டு வந்தார்.

இந்தநிலையில் முதல்–அமைச்சர் நாராயணசாமி போட்டியிட ஏதுவாக அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து நெல்லித்தோப்பு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு முதல்–அமைச்சர் நாராயணசாமி வெற்றிபெற்றார்.

நாராயணசாமி வாழ்த்து

இத்தகைய சூழ்நிலையில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த ஜான்குமார் புதுச்சேரி அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். நேற்று அவர் சட்டமன்ற வளாகத்தில் 2–வது மாடியில் உள்ள தனது அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்டார்.

அவரை இருக்கையில் அமர வைத்து முதல்–அமைச்சர் நாராயணசாமி வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், லட்சுமிநாராயணன், தீப்பாய்ந்தான், ஜெயமூர்த்தி, விஜயவேணி, தனவேலு, முன்னாள் அமைச்சர் வல்சராஜ் நிர்வாகிகள் ஏ.கே.டி.ஆறுமுகம், வினாயகமூர்த்தி உள்பட நெல்லித்தோப்பு தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story