திருவள்ளூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


திருவள்ளூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2017 4:00 AM IST (Updated: 14 Jan 2017 1:49 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டம் பெரியக்குப்பத்தில் நேற்று திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கினார். திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க.தலைமை செயற்குழு உறுப்பினருமான வி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி, மாவட்ட அவைத்தலைவர் திராவிட பக்தன், மாநில விவசாய பிரிவு செயலாளர் ஆர்.டி.இ.ஆதிசே‌ஷன், மாநில சட்ட இணைசெயலாளர் பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் 500–க்கும் மேற்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க கோரியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், பீட்டாவிற்கு துணைபோகும் மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள். அப்போது அந்த மேடையில் காளை மாட்டுடன் தி.மு.க. நிர்வாகிகள் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இதில் மாவட்ட துணை செயலாளர் காயத்ரிஸ்ரீதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கும்மிடிப்பூண்டி

திருவள்ளூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கும்மிடிப்பூண்டி தபால் நிலையம் முன்பு நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு தலைமை தாங்கினார்.

தலைமை செயற்குழு உறுப்பினரும், கிழக்கு ஒன்றிய செயலாளருமான டி.ஜெ.கோவிந்தராசன், மேற்கு ஒன்றியசெயலாளர் மணிபாலன், எல்லாபுரம் மூர்த்தி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ஆழியாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


Next Story