சரக்கு மற்றும் சேவைவரி சட்டத்தின் கீழ் பதிவு செய்தல் குறித்த பயிற்சி முகாம்


சரக்கு மற்றும் சேவைவரி சட்டத்தின் கீழ் பதிவு செய்தல் குறித்த பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 14 Jan 2017 3:00 AM IST (Updated: 14 Jan 2017 2:12 AM IST)
t-max-icont-min-icon

சென்னை (மையம்) வணிகவரி கோட்டம், சரகம் 4 மற்றும் சரகம் 5 சார்ந்த வணிகர்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் பதிவு செய்தல் குறித்த பயிற்சி மற்றும் சேவை முகாம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா கூடைப்பந்து உள்விளையாட்டு அரங்கில் நே

சென்னை,

சென்னை (மையம்) வணிகவரி கோட்டம், சரகம் 4 மற்றும் சரகம் 5 சார்ந்த வணிகர்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் பதிவு செய்தல் குறித்த பயிற்சி மற்றும் சேவை முகாம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா கூடைப்பந்து உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடத்தப்பட்டது.

பயிற்சி மற்றும் சேவை முகாமுக்கு இணை ஆணையர், சென்னை (மையம்) கோட்டம் தலைமை தாங்கினார். சரகம் 4 மற்றும் சரகம் 5 துணை ஆணையர்கள் முன்னிலை வகித்தனர். நேற்று காலை காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பயிற்சி மற்றும் சேவை முகாம் நடந்தது.

இதில் வணிகர்களுக்கு சரக்கு மற்றும் சேவைவரி சட்டத்தின் கீழ் பதிவுசெய்தல் குறித்த விளக்கங்களும், வணிகர்களின் சந்தேகங்களுக்கு தெளிவுகளும், வணிகர்களுக்கு பதிவுசெய்தல் தொடர்பான உதவி மையங்களும் ஏற்படுத்தப்பட்டு கூட்ட அரங்கிலேயே வணிகவரித்துறை பணியாளர்கள் மூலம் பதிவு செய்யப்பட்டது.


Next Story