மாடியில் உள்ள குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு
சாந்தாராம் குளத்தில் மீன்கள் அதிகளவில் உள்ளன. இந்த குளத்தின் ஓரத்தில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் நடைப்பயிற்சி செய்வது வழக்கம்.
மும்பை
மலாடு கிழக்கு, குரார்காவ் பகுதியில் உள்ள சாந்தாராம் குளத்தில் மீன்கள் அதிகளவில் உள்ளன. இந்த குளத்தின் ஓரத்தில் காலை மற்றும் மாலை நேரத்தில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். அப்போது அவர்கள் மீன்களுக்கு இரை போடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று காலை குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன. இதை பார்த்து அங்கு நடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து மாநகராட்சிக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் ஆய்விற்காக குளத்தின் தண்ணீரை எடுத்து சென்றனர். மேலும் குளத்தில் தூர்வாரும் பணிகளை தொடங்கினர். இதே குளத்தில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மீன்கள் செத்து மடிந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story