அதிக இடங்களில் வெற்றி பெறும் கட்சியில் இருந்தே மேயர் தேர்ந்தெடுக்கப்படுவார் பா.ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வே பேட்டி


அதிக இடங்களில் வெற்றி பெறும் கட்சியில் இருந்தே மேயர் தேர்ந்தெடுக்கப்படுவார்  பா.ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வே பேட்டி
x
தினத்தந்தி 14 Jan 2017 4:41 AM IST (Updated: 14 Jan 2017 4:41 AM IST)
t-max-icont-min-icon

அதிகப்படியான இடங்களில் வெற்றி பெறும் கட்சியில் இருந்தே மேயர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று ராவ்சாகேப் தன்வே தெரிவித்தார்.

மும்பை

ராவ்சாகேப் தன்வே

மும்பை மாநகராட்சி தேர்தல் பிப்ரவரி 21–ந் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், மாநில பாரதீய ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வே நேற்று மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

எங்களின் உண்மையான போட்டியாளர்கள் காங்கிரஸ்– தேசியவாத காங்கிரஸ் தான். இருந்தாலும், போர் (தேர்தல்) தொடங்கியதும், எங்கள் வழியில் யார் வந்தாலும் துவம்சம் செய்துவிடுவோம். சிவசேனாவுடன் கூட்டணி அமைக்கவே நாங்கள் விரும்புகிறோம். எனினும், வெளிப்படை நிர்வாக பிரச்சினையை சுட்டிக்காட்டி, மாற்றுவழியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தொண்டர்கள் கருதுகின்றனர்.

பா.ஜனதா ‘பெரிய அண்ணன்’

அதிகப்படியான இடங்களில் வெற்றி பெறும் கட்சியில் இருந்தே மேயர் தேர்ந்தெடுக்கப்படுவார். பால் தாக்கரே மற்றும் பிரமோத் மகாஜனின் காலகட்டத்திலேயே இந்த சூத்திரம் தான் பின்பற்றப்பட்டு வந்தது. எங்களது பலம் பெருகிவிட்டது. ஆகையால், இந்த காரணி மீது கவனம் செலுத்த வேண்டும். மராட்டிய அரசியலில் பா.ஜனதா பெரிய அண்ணனாக உருவெடுத்துவிட்டது.

இவ்வாறு ராவ்சாகேப் தன்வே தெரிவித்தார்.


Next Story