பொங்கல் விழா கொண்டாட்டம்


பொங்கல் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2017 5:22 AM IST (Updated: 14 Jan 2017 5:22 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் விழா கொண்டாட்டங்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

உசிலம்பட்டி

உசிலம்பட்டி

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரியில் தாளாளர் பாண்டியன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.் இதில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கருப்பத்தேவர், குபேந்திரன், போஸ், கம்பம் குபேந்திரன் மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பொன்மணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவிற்கு ஜோசப் கார்த்திக் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் ராணி, கீர்த்தி மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நாடார் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் ஜெயராஜ் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், பள்ளி முதல்வர் ஆனந்தி, துணை முதல்வர் ஆனந்தராஜா மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

எழுமலை பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவிற்கு பள்ளி தாளாளர் தலைமை தாங்கினார். இதில் பள்ளி முதல்வர் ஆறுமுக சுந்தரி, நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதேபோல் எழுமலை விச்வ வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் தாளாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் செயலாளர் இளமாறன், பொருளாளர் முருகன், நிறுவனச் செயலாளர் சுதாகரன், மற்றும் நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலூர்

மேலூரில் உள்ள மாவட்ட உரிமையியல் கோர்ட்டு வளாகத்தில் மேலூர் வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பெண் வக்கீல்கள் அனைவரும் பானையில் பொங்கல் வைத்தனர். மாவட்ட உரிமையியல் நீதிபதி சுரேஷ், குற்றவியல் கோர்ட்டு மாஜிஸ்திரேட் செல்வகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் அனைத்து வக்கீல்கள், குமாஸ்தா சங்க உறுப்பினர்கள், கோர்ட்டு ஊழியர்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

சோழவந்தான்

சோழவந்தானிலுள்ள ஐ.டி.சி மழலையர் பள்ளியில் பொங்கல் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு கல்வி குழும தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் தனசேகரன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சங்கர் வரவேற்றார். பின்னர் பள்ளி வளாகத்தில் குழந்தைகள் பாரம்பரிய உடையணிந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பள்ளியின் தலைவர் செந்தில்குமார் பொங்கல் வழங்கினார். இதில் ஆசிரிய ஆசிரியைகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமங்கலம்

திருமங்கலம்முன்சீப்கோர்ட்டில் வக்கில்கள் சங்கத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது வக்கீல் சங்கத் தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கன்னையா முன்னிலை வகித்தார். நீதிபதி ஸ்ரீவித்யா கலந்து கொண்டு பேசினார். இதில் பானை உடைப்பு , ஓட்டப்ந்தயம் உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

திருப்பரங்குன்றம்

மதுரை பசுமலை மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி செயலாளர் விஜயராகவன் தலைமை தாங்கினார் உதவி செயலாளர் ராஜேந்திபாபு, பொருளாளர் கோவிந்தராஜ், உதவி தலைவர் ராஜகோபால் கல்லூரி முதல்வர் நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா ஒருங்கிணைப்பாளர் பரிமளாநாயகி வரவேற் றார்.

இதில் மாணவிகள் கைத்தறி புத்தாடை அணிந்து மண் பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக அன்னை தெராசா பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் ஆனந்தவள்ளி மகாதேவன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் கல்லூரி சுய நிதிபிரிவு இயக்குனர் ராஜாகோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்துறை தலைவர் மல்லிகா நன்றி கூறினார். 

Next Story