செவ்வாய்க் கிரகத்தில் அமைக்கப்படும் வீடுகள்


செவ்வாய்க் கிரகத்தில் அமைக்கப்படும் வீடுகள்
x
தினத்தந்தி 14 Jan 2017 9:01 AM IST (Updated: 14 Jan 2017 9:01 AM IST)
t-max-icont-min-icon

செவ்வாய்க் கிரகத்தில் அமைக்கப்படும் வீடுகள்

செவ்வாய்க் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரங்கள் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் ‘நாசா’ நிறுவனம், அங்கு மக்களை குடியேற்றும் முயற்சிகளிலும் ஈடுபட்டுவருகின்றது.

அந்த வரிசையில், செவ்வாய்க் கிரகத்தின் கால நிலைக்கு ஏற்ப வீடுகளை அமைக்கத் தயாராகி வருவதுடன், அதற்கான அடிப்படை வடிவங்களை உருவாக்கியுள்ளது.

செவ்வாயில் அமைக்கப்படும் வீடுகள் வெப்பத்தையும், உயர் கதிர்வீச்சையும் தாங்கக்கூடியதாக இருப்பதுடன், வளைந்த மேற்பரப்பினைக் கொண்டதாகவும் இருக்குமாம்.

முதல்கட்டமாக இந்த வீடுகள், விண்ணியல் ஆய்வாளர்கள் தங்கி ஆய்வினை மேற்கொள்ளும் நோக்கத்துடன் அமைக்கப்பட உள்ளன.

வர்ஜினியாவில் உள்ள நாசாவின் லாங்லே ஆராய்ச்சி மையம் இந்த வீடுகளை உருவாக்கிவருகிறது.

இந்த வீடுகள் மிகவும் எடை குறைந்தவையாகவும், எளிதாக எடுத்துச் செல்லகூடியதாகவும் இருப்பதுடன், மாற்றி அமைக்கக்கூடிய இலகு ரக ரோபோ தொழில் நுட்பத்தையும் கொண்டிருக்கின்றன.

Next Story