சூரியக் குடும்பம் போன்ற நட்சத்திரக் கூட்டம்


சூரியக் குடும்பம் போன்ற நட்சத்திரக் கூட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2017 9:18 AM IST (Updated: 14 Jan 2017 9:18 AM IST)
t-max-icont-min-icon

சூரியக் குடும்பம் போன்ற நட்சத்திரக் கூட்டம்

சூரியக் குடும்பத்தைப் போன்ற ஒரு நட்சத்திரக் கூட்டத்தை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

அந்நாட்டின் ஹெர்ட்போர்ட்ஷையர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்தான் இக்கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கின்றனர்.

இவர்கள், விண்வெளியில் சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த 816 நட்சத்திரங்களைக் கொண்ட குடும்பம் இருப்பதை அறிந்திருக்கின்றனர்.

இக்குடும்பம் சுமார் 50 லட்சம் ஆண்டுகளாக பார்வைக்குத் தென்படாமல் இருந்ததாகவும், இதில் பெரும்பாலான நட்சத்திரங்களில் உயிர் வாழத் தகுந்த சூழல் நிலவுவதாகவும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கடந்த 2010-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக அகச்சிவப்புக் கதிர்களைக் கொண்டு ஆய்வு நடத்தியதில் குறிப்பிட்ட இந்த நட்சத்திரக் கூட்டம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

Next Story