குடியாத்தத்தில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி


குடியாத்தத்தில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி
x
தினத்தந்தி 16 Jan 2017 4:15 AM IST (Updated: 15 Jan 2017 9:31 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தத்தில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி

குடியாத்தம்,

குடியாத்தம் கவுண்டி கிரிக்கெட் கிளப் சார்பில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது வழக்கம். அதன்படி 25–வது ஆண்டு போட்டி மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பெயரில் நடத்தப்பட்டது. இதில் 24 அணிகள் பங்கேற்றது.

தொடக்க விழாவுக்கு கிரிக்கெட் கிளப் தலைவர் திருசிற்றம்பலம் தலைமை தாங்கினார். அரசு வக்கீல் கே.எம்.பூபதி, தொழிலதிபர்கள் கொட்டாமிட்டா பாபு, இமகிரிபாபு, கே.ஜோதிராமன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வி.ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிரிக்கெட் போட்டிகளை கே.எம்.ஜி.கல்லூரி செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக ரூ.68 ஆயிரமும், 2 –வது பரிசாக ரூ.34 ஆயிரமும் வழங்கப்பட்ட உள்ளது.

நிகழ்ச்சியில் கிளப் நிர்வாகிகள் குட்டி சுரேஷ், எம்.ஜி.ஆனந்தன், வெங்கடேசன், விஜயகுமார், குமாரலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story