ரத்தினகிரி மலையில் நடைபெற்ற பூப்பறிக்கும் விழாவில் 21 கிராம மக்கள் பங்கேற்பு
சரவணம்பட்டி ரத்தினகிரி மலையில் நடைபெற்ற பூப்பறிக்கும் விழாவில் 21 கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.
சரவணம்பட்டி,
பூப்பறிக்கும் திருவிழா
கோவை சரவணம்பட்டியை அடுத்த கரட்டுமேட்டில் உள்ள ரத்தினகிரி மலையில் மருதாசலக்கடவுள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாட்டு பொங்கல் அன்று பூப்பறிக்கும் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். பூப்பறிக்கும் விழாவையொட்டி நேற்று ரத்தினகிரி மலையில் உள்ள முருகப்பெருமானுக்கு 16 வகை திரவிய அபிஷேகங்கள் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
21 கிராம மக்கள்
ரத்தினகிரி மலையைச் சுற்றியுள்ள சரவணம்பட்டி, விளாங்குறிச்சி, காளப்பட்டி, குரும்பபாளையம், கோவில்பாளையம், கள்ளிப்பாளையம், கீரணத்தம், எஸ்.எஸ்.குளம், வெள்ளாணைப்பட்டி, வெள்ளமடை, அக்ரஹார சாமக்குளம் உள்பட 21 கிராம மக்கள் குடும்பத்தினருடன் வந்து இருந்தனர்.
பின்னர் இரவு 8 மணி வரை சிறப்பாக பொங்கல் விழாவை கொண்டாடினர். இங்கு மக்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வருவதையொட்டி, நீர் மோர் பந்தல், கரும்பு, உணவு வகைகள், பொருட்காட்சி, விளையாட்டு பொருட்கள் விற்பனை என மலையைச் சுற்றி பொங்கல் விழா களைகட்டியது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் செல்வராஜ் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
இதையொட்டி, 21 கிராம மக்களும் கூடுவதால் அங்கு தற்காலிக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு கோவை மாநகர கிழக்கு மண்டல உதவி கமிஷனர் சுந்தர்ராஜன், சரவணம்பட்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் 4 திசைகளிலும் கண்காணிக்கப்படும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட வேன் முதன்முறையாக கொண்டுவரப்பட்டது. இந்த வேன் மூலம் 360 டிகிரி கோணத்தில் 4 திசைகளும் கண்காணிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு பணியை போலீசார் செய்திருந்தனர்.
வ.உ.சி. பூங்கா
அதேபோல் பொங்கல் பண்டிகையையொட்டி கோவை வ.உ.சி. சிறுவர் பூங்காவில் தங்களது பெற்றோர்களுடன் குழந்தைகள் திரண்டனர். பின்னர் அங்கிருந்த விளையாட்டு உபகரணங்களில் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.

Next Story