மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

காரைக்கால்,
காரைக்கால் டவுன் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்கச் சென்ற நபரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உச்சநீதிமன்ற ஆணைப்படி அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் வின்சென்ட் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடதுசாரிகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
இதுகுறித்து இயக்க அமைப்பாளர் வின்சென்ட் நிருபர்களிடம் கூறும்பொழுது, காரைக் கால் டவுன் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற அகஸ்டின் என்ற வாலிபர் அங்குள்ள போலீசாரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட காவல் துறை அதிகாரி மற்றும் மாநில கவர்னர் ஆகியோரிடம் புகார் மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்தும், உச்சநீதிமன்ற உத்தரவுபடி அனைத்து போலீஸ்நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண் டும் என்றும் புதுச்சேரியில் மனித உரிமை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Next Story