கர்நாடக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் உண்ணாவிரதம்

காரைக்கால்,
காவிரி ஆற்றில் தண்ணீர்விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், கடைமடை பகுதியான காரைக்கால் பகுதிக்கு காவிரி நீரை பெற்றுத் தராத மத்திய அரசை கண்டித்தும், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மரி அந்துவான் தலைமை தாங்கினார். மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர். இந்த போராட்டம் பற்றி மரி அந்துவான் கூறும்போது, காவிரியின் கடைமடை பகுதியான காரைக்காலுக்கு காவிரி நீர் வராத காரணத்தினால் காரைக்கால் மாவட்டத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் கருகிவிட்டன. டெல்டா மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழக்கும் பரிதாபநிலை ஏற்பட காவிரியில் நீர் தர மறுக்கும் கர்நாடக அரசும், அதை கேட்டு பெற்றுத் தராத மத்திய அரசும்தான் காரணமாகும். புதுச்சேரி அரசு உடனடியாக காரைக் கால் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பில் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.

Next Story