ரெயில் மறியலுக்கு முயற்சி: தமிழர் அதிகாரம் அமைப்பினர் 25 பேர் கைது

ரெயில் மறியலுக்கு முயற்சி: தமிழர் அதிகாரம் அமைப்பினர் 25 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jan 2017 2:54 AM IST (Updated: 16 Jan 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் மறியலுக்கு முயற்சி: தமிழர் அதிகாரம் அமைப்பினர் 25 பேர் கைது

புதுச்சேரி,

இந்திய ஒருமைப்பாட்டை பீட்டா அமைப்பு தடுப்பதாகவும், அந்த அமைப்பினை தடை செய்யக்கோரியும் புதுச்சேரியில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக தமிழர் அதிகாரம் அமைப்பினர் அறிவித்திருந்தனர். இதற்காக அவர்கள் அமைப்பாளர் தமிழன் மீரான் தலைமையில் புதுவை ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.

ஆனால் அவர்களது போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழர் அதிகாரம் அமைப்பினர் 25 பேரை கைது செய்தனர். கைதான அனைவரும் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story