கடைக்காரரை தாக்கிய 5 பேர் கைது


கடைக்காரரை தாக்கிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jan 2017 2:54 AM IST (Updated: 16 Jan 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

கடைக்காரரை தாக்கிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பள்ளிப்பட்டு,

தாக்குதல்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா மடுகூர் கிராமத்தை சேர்ந்தவர் பூங்காவனம். இவரது மகன் சுரேஷ் (வயது 24). இவர் சோளிங்கரில் இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை வியாபாரத்தை முடித்து விட்டு சுரேஷ் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார்.

வழியில் ஆதிவராகபுரம் காலனியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடி விட்டு சாலையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது சுரேஷ் தனது மோட்டார் சைக்கிளுக்கு வழி விடும்படி கூறினார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆதிவராகபுரம் காலனியை சேர்ந்த வாலிபர்கள் கிரிக்கெட் மட்டையால் சுரேஷை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

கைது

இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும் திருத்தணி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

சுரேஷை கிரிக்கெட் மட்டையால் தாக்கி காயப்படுத்திய ஆதிவராகபுரம் காலனியை சேர்ந்த ஆனந்தன் (23), இளங்கோவன் (25), திலீப் (18), செல்வராஜ் (25), ராஜா (22) ஆகியோரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story