புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் வரலட்சுமி மதுசூதனன்
காஞ்சீபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த ஆப்பூர் ஊராட்சியை சேர்ந்தவர் வரலட்சுமி மதுசூதனன்.
தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்த அவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வண்டலூர், காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, ஊரப்பாக்கம், மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு உள்ளிட்ட பல இடங்களுக்கு தனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை வழங்கியுள்ளார். முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை, மாணவர் கல்விக்கடன் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி அதன் மூலம் பிரச்சினைகளை தீர்த்து வருகிறார்.
வார்தா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய அவர் துறை ரீதியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய தீர்வு கண்டுள்ளார்.
வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் பேசும் போது கூறியதாவது:-
தனது தொகுதிக்கு உட்பட்ட பல இடங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களின் பிரச்சினைகளை கேட்டறியும் சூழ்நிலை உள்ளதால் தினந்தோறும் அலுவலகத்திற்கு வரமுடியாத சூழ்நிலை உள்ளது. ஆகவே பொதுமக்கள் அலுவலக ஊழியரிடம் மனுக்களை கொடுத்தால் 10 நாட்களுக்கு தீர்வு காணப்படும் என்றார்.
மேலும் வார்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டபோது அவர்களிடம் தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தி.மு.க. மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் ஒத்துழைப்போடு அனைவருக்கும் நிவாரணம் வழங்கக்கோரி மனு கொடுத்துள்ளோம். அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story