ரூ.2½ கோடி செலவில் முல்லையாற்று பாலம் கட்டும் பணிகள் தீவிரம்
காரைக்கால் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் ரூ.2½ கோடி செலவில் கட்டப்பட்டு வரும் முல்லையாற்றுப் பால பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு நிறைவடையும் நிலையை எட்டியுள்ளன.
காரைக்கால்,
இந்த பாலம் விரைவில் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தடையற்ற போக்குவரத்துக்காக
புதுச்சேரி யூனியன் பிரதேச பகுதிகளை பிரெசுக் காரர்கள் ஆட்சி செய்த போது தடையற்ற போக்குவரத்திற்காக காரைக்கால் பகுதியின் பல்வேறு இடங் களில் ஆறுகளின் மீது பாலங்களை கட்டினார் கள். அவற்றில் நண்டலாற்று பாலம், அரசலாறு பாலம், திருமலைராஜனாற்று பாலம், முல்லையாற்று பாலம் லெமேர்பாலம், வாஞ்சியாற்று பாலங் கள் குறிப்பிடத்தக்கவையாகும். அரசலாறு பாலம் சுனாமியின்போது சேதமடைந்தது. அதற்கு பதிலாக புதிதாக பாலம் கட்டப்பட்டது. திருமலைராஜனாற்று பாலத்தின் வழியாக அளவுக்கதிகமான எடையுள்ள வாகனங்கள் அதிகளவில் சென்றுவரத் தொடங்கியதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த பாலம் வலுவிழந்தது. எனவே அதற்கு அருகில் மாற்று பாலம் ஒன்று கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதுபோன்று லெமேர் பாலத்திற்கு மாற்றாக அதன் அருகில் புதிதாக பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
முல்லையாற்று பாலம்
இந்தநிலையில், காரைக்கால் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் முல்லையாற்றின் குறுக்கே இரண்டு கண் மதகுகளுடன் கட்டப்பட்டிருந்த பாலம் சமீபகாலமாக வலுவிழக்கத் தொடங்கியது. அந்த பாலமானது ஒருவழி பாதையாக மிகவும் குறுகலாகவும் காணப்பட்டதால் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. எனவே, அந்த பாலத்தை இடித்துவிட்டு புதிதாக பாலம் கட்டுவதற்காக பொதுப்பணித்துறையினரால் முடிவு செய்யப்பட்டு அதற்கான டெண்டர் விடப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் அந்த பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டது. பழைய பாலத்திற்கு அருகில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு அதன் வழியாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. அந்த பாலத்தின் வழியாக தற்போது போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
ரூ.2½ கோடி செலவில்
புதிய பாலம் இருவழி போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் சுமார் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலையாக இருப்பதால் பாலம் கட்டுமான பணிகளை விரைந்து மேற்கொள்ள பொதுப்பணித்துறை நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பாலம் கட்டுமான பணிகள் பெருமளவில் முடிக்கப்பட்டு தற்போது பாலத்தின் இருபுறமும் சாலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு இந்த பாலம் விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Next Story