முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில பளுதூக்குதல் போட்டி
2016-17-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான பளுதூக்குதல் போட்டி
தஞ்சாவூர்,
தஞ்சை கமலாசுப்பிரமணியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெறுகிறது.
இந்த போட்டியில் 468 பேர் கலந்து கொண்டனர். இதில் ஆண்களுக்கு 8 பிரிவுகளிலும், பெண்களுக்கு 7 பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவிற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். வைத்திலிங்கம் எம்.பி., ரெங்கசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு வரவேற்றார். விழாவில் அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு ஆண்களுக்கான போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார். விழாவில் பெண்கள் பிரிவில் 48 கிலோ உடல் எடைபிரிவில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அகிலாவுக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும், 2-ம் இடம் பிடித்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த காயத்ரிக்கு ரூ.75 ஆயிரத்துக்கான காசோலையையும், 3-ம் இடம் பிடித்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பூங்கொடிக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையையும் அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார். விழாவில் திருச்சி மண்டல விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதுநிலை மேலாளர் கீதாஞ்சலிரத்னாமாலா, தாசில்தார் குருமூர்த்தி, கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், கல்வி புரவலர் ரமேஷ், குருமூர்த்தி, கண்ணன், வினு மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பளுதூக்குதல் பயிற்சியாளர் செந்தில் நன்றி கூறினார்.

Next Story