தமிழக மக்களின் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்காதது வருத்தமளிக்கிறது


தமிழக மக்களின் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்காதது வருத்தமளிக்கிறது
x
தினத்தந்தி 16 Jan 2017 4:30 AM IST (Updated: 16 Jan 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டுக்காக தமிழக மக்களின் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்காதது வருத்தமளிக்கிறது என்று புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி தெரிவித்தார்.

ஸ்ரீரங்கம்,

ஜல்லிக்கட்டு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி நேற்று சாமி தரிசனம் செய்ய வந்தார். அவர் பெருமாள், தாயார், ராமானுஜர், சக்கரத்தாழ்வார் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்தில் இருந்தே தமிழகத்தில் சிலம்பம், ஜல்லிக்கட்டு போன்ற வீரவிளையாட்டுகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்று வந்தது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டிற்காகவே காளைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது வருத்தமளிக்கின்றது. தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகளும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றன. மாணவர்களும், பொதுமக்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த போராட்டங்களுக்கு மத்திய அரசு செவிசாய்க்காதது வருத்தமளிக்கிறது.

அவசர சட்டம்

மத்திய அரசு நினைத்திருந்தால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அவசர சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டை நடத்தி இருக்கலாம். தமிழக மக்களின் குரலுக்கு மோடி செவிசாய்க்காதது மோடி தமிழகத்திற்கும், தமிழக வீரவிளையாட்டிற்கும் இழைத்த அநீதி ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story