சிறுமி உள்பட 2 பேர் பலி; மேலும் 3 பேர் படுகாயம்
ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள், கார் அடுத்தடுத்து மோதிய விபத்தில் ஆட்டோவில் இருந்த ஒரு பெண்ணும், சிறுமியும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
தென்காசி,
ஆட்டோவில் சென்றனர்
நெல்லை மாவட்டம் தென்காசி ஐவராஜா கோவில் தெருவைச் சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது 40), ஆட்டோ ஓட்டி வருகிறார். அவருடைய மனைவி ராம இசக்கி (35), மகள் செல்வ கீர்த்தனா (8).
உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நம்பிராஜன் தனது குடும்பத்தினருடன் நேற்று மதியம் ஆட்டோவில் கடையநல்லூருக்கு சென்று கொண்டிருந்தார். அவர்களுடன் உறவினரான தென்காசி மஞ்சனக்கார கோவில் தெருவைச் சேர்ந்த அய்யப்பன் மனைவி முத்துமாரியும் சென்றிருந்தார்.
கடையநல்லூருக்கு முன்னதாக சிவராமபேட்டை அருகே மதுரை மெயின் ரோட்டில் சென்ற போது, எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. எதிர்பாராதவிதமாக அந்த மோட்டார் சைக்கிளும், நம்பிராஜன் குடும்பத்தினர் சென்ற ஆட்டோவும் மோதிக்கொண்டன. இதில் ஆட்டோ நிலைதடுமாறி ஓடியது. அப்போது அந்த ஆட்டோவும், ஒரு காரும் மோதிக்கொண்டன.
2 பேர் பலி
இதில் ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் முத்துமாரி, சிறுமி செல்வ கீர்த்தனா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ராமஇசக்கி படுகாயம் அடைந்தார். நம்பிராஜனுக்கும் காயம் ஏற்பட்டது. மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த தங்கத்துரைக்கு இடதுகால் முறிந்து பலத்த காயம் அடைந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆய்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக ராமஇசக்கி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தங்கத்துரை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பலியான சிறுமி செல்வ கீர்த்தனா, அவளுடைய உறவுக்கார பெண் முத்துமாரி ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த விபத்து பற்றி ஆய்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story