நெல்லையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


நெல்லையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 16 Jan 2017 4:30 AM IST (Updated: 16 Jan 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை டவுனில் திருவள்ளுவர் சிலைக்கு தி.மு.க. உள்பட பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நெல்லை,

தி.மு.க.

திருவள்ளுவர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை டவுன் வாகையடி முக்கு வ.உ.சி. தெருவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தி.மு.க. சார்பில் நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் தலைமையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் லெட்சுமணன் எம்.எல்.ஏ., பகுதி செயலாளர் கோபி என்ற நமச்சிவாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

த.ம.மு.க.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் கண்மணி மாவீரன் தலைமையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் டேனியல் பாலையா, வேங்கை மார்பன், சின்னத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருவள்ளுவர் பேரவை, தமிழ் நல கழகம் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும் தமிழ் ஆர்வலர்கள் ரோட்டையொட்டி உள்ள வீட்டு சுவர்களின் வரிசையாக திருக்குறள்களை எழுதினார்கள். ஆண்டு தோறும் திருவள்ளுவர் சிலைக்கு பெயிண்டு பூசி புதுப்பிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு சிலைக்கு பெயிண்டு பூசாமல் கைவிடப்பட்டுள்ளது.


Next Story